Monday, September 30, 2013

கடைசியில் உலக நாடுகளை கூட்டு சேர்த்து எமது போராட்டத்தை பயங்கரவாதம் என்று சொல்லி அந்த அந்த நாடுகளில் தடை செய்ய வைத்தது, இறுதி போரை சிறீலங்காவை தொடங்க வைத்தது, கிளிநொச்சியுடன் அவர்களால் முடியாமல்போக, தனது இராணுவத்தை சிறீலங்கா இராணுவச்சீருடையுடன் களமிறக்கியது.

 

உறுதி எடுத்த நிகழ்வு..

இந்திய படைகளுடன் மோதவேண்டிய தருணம் வந்த போது, என்ன நெருக்கடி வந்தாளும், எமது தமிழீழ இலட்சியத்தில் இருந்து பின் வாங்கமாட்டோம் என உறுதி எடுத்து, வெறும் 2000 சாரம் கட்டிய பொடியள் களமாடி வெற்றி பெற்றனர், அந்த நிகழ்வுக்கு பிறகு, இந்தியா புலிகளுடன் நேரடியாக மோதுவதை தவிர்த்து சதி வேலைகளை ஆரம்பித்தது, துரோகிகளையும், மாற்று இயக்க உறுப்பினர்களையும், பயன் படுத்தி பார்த்தது, அது தமிழீழ புலனாய்வு பிரிவால் ( உள்ளக இராணுவப் புலனாய்வு )வெற்றி கொள்ளபட்டது. கடைசியில் உலக நாடுகளை கூட்டு சேர்த்து எமது போராட்டத்தை பயங்கரவாதம் என்று சொல்லி அந்த அந்த நாடுகளில் தடை செய்ய வைத்தது, இறுதி போரை சிறீலங்காவை தொடங்க வைத்தது, கிளிநொச்சியுடன் அவர்களால் முடியாமல்போக, தனது இராணுவத்தை சிறீலங்கா இராணுவச்சீருடையுடன் களமிறக்கியது. அப்போதும் புலிகள் உக்கிரமான எதிர்ப்பை காட்டவே இரசாயன ஆயுதம் பாவிக்கப்பட்டது. அதன் பிறகு போராட்டத்தை அழியவிடாமல் பாதுகாக்கவே ஆயுதங்களை மௌணிக்க போவதாக புலிகள் அறிவித்தனர்.

தொடரும்

-வித்தகன் (Thamizh Intelligence Center-தமிழ் புலனாய்வு மையம்)